செய்திகள்

மஹிந்த தொடர்பில் ராஜித கூறு­வது பொய்: சுசில் பிரே­ம ஜ­யந்த

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ஷவை பிர­தமர் வேட்­பா­ள­ராக நிறுத்­தவோ அவ­ருக்கு தேசிய பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியோ வழங்­கப்­பட மாட்­டாது என அமைச்சர் ராஜித சேனா­ரத்ன கூறி­யுள்­ளமை உண்­மைக்கு புறம்­பா­னது என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுசில் பிரே­ம்­ஜ­யந்த தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மற்றும் தற் போதைய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகியோர்களுக்கிடையில் ஒருங்­கி­ணைப்பு பணி­களை மேற்­கொள்ள நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழுவின் உறுப்­பி­ன­ரான சுசில் பிரே­ம்­ஜ­யந்த, குழுவில் அங்கம் வகிக்­காத நபர்கள் வெளி­யிடும் கருத்­துக்­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றும் கூறி­யுள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ச­வுக்கு பிர­தமர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிடும் வாய்ப்பு வழங்­கப்­பட மாட்­டாது எனவும் அவர் தேசிய பட்­டியல் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் நிய­மிக்­கப்­பட மாட்டார் எனவும் அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரான அமைச்சர் ராஜித சேனா­ரத்ன நேற்று முன்தினம் கூறி­யி­ருந்தார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ, பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­கவும் எதிர்க்­கட்சித் தலைவராகவும் பிரதமராகவும் நாட் டின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்து ள்ளதாகவும் இதனை தவிர அவருக்கு வழ ங்க நாட்டில் பதவிகள் இல்லை எனவும் ராஜித சேனாரத்ன சுட்டிக்காட்டியிருந்தார்.