செய்திகள்

மஹிந்த பயன்படுத்திய “ஹெலி”களுக்கான கட்டணத்தை இராணுவ அதிகாரியோருவர் செலுத்தியுள்ளாராம்

கடந்த ஜனாதிபதி ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரின் குடும்ப உறுப்பினர்கள் போக்கு வரத்துக்கென பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படும் ஹெலிகப்டர்களுக்கான கட்டணத்தில் பெருந்தொகையை இராணுவ அதிகாரியொருவரே செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தல் காலத்தில் ஹெலிக்கப்டர் மற்றும் விமானங்கள் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது விமானப்படையின் அதிகாரியொருவரிடமிருந்து இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட ஹெலிகப்படர்களுக்கான கட்டணங்கள் முறையாக செலுத்தப்படவில்லையென்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்ற நிலையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.