செய்திகள்

மஹிந்த பயன்படுத்திய 5000 வாகனங்களுக்கு எதிராக 114 முறைப்பாடுகள்

கடந்த அரசாங்கத்தில் நடந்த ஜனாதிபதி தேர்தலுக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சுமார் 5000 வாகனங்களை பயன்படுத்தியுள்ளதுக்கு எதிராக இதுவரை 114 முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக அமைச்சர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இம்முறைப்பாடுகள் வெவ்வேறு அரச திணைக்களங்களின் ஊடாக தமக்கு கிடைக்கபெற்றுள்ளது எனவும் அவற்றுக்கு ஏதிராக வெகுவிரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்