செய்திகள்

மஹிந்த பிரதமரானதும் நிதி மோசடி விசாரணை பிரிவினரை கல்லால் அடித்துக் கொல்லுவோம் என்றவருக்கு சிக்கல்

மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமரானதும் உடனடியாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு அதிகாரிகள் அடங்களாக உறுப்பினர்களை கல்லால் அடித்து கொல்லுவோம் என தென் மாகாகண சபையின் மஹிந்த ராஜபக்‌ஷ தரப்பு உறுப்பினரான டீ.பி.உபுல் கருத்து வெளியிட்டுள்ள நிலையில் பொலிஸ் திணைக்களம் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அவரின் குறித்த கருத்தை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றோம். தண்டனைக்கோவை சட்டத்தின் பிரகாரம் அவரின் அபாயகரமான கருத்துக்கு 7வருட சிறை தண்டனை வழங்கப்படலாம். அத்துடன் அரச அதிகாரிகளை அச்சுறுத்தியமைக்காக அவருக்கு அதி கூடிய தண்டனையை வழங்கலாம் என பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவெளை இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.