செய்திகள்

மஹிந்த பிரதமரானால் பொலிஸ் அதிகாரிகளை கல்லால் அடித்து கொல்லுவோம் என்றவர் கைது

மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியானதும் நிதி மோசடி விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகளை கல்லால் அடித்துக் கொல்லுவோம் என தெரிவித்த தென் மாகாண சபை உறுப்பினர் டீ.வீ.உபுல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று அவர் கொழும்பிலுள்ள  விசேட பொலிஸ் விசாரணை பிரிவுக்கு  இன்று காலை அழைக்கப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளின் பின்னர் மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வாரம் மொனராகலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டிருந்த நிலையில். அந்த கருத்து அபாயகரமானது என்பதால் விசாரணை நடத்தி வந்த பொலிஸ் விசாரணை பிரிவு இன்று அவரை கைது செய்துள்ளது.