செய்திகள்

மஹிந்த பிரதமர் வேட்பாளரா? மைத்திரி-மஹிந்த சந்திப்பில் முடிவு

நாளை மறுதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சந்திக்கவுள்ளார்என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சந்திப்பின்போது எதிர்வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக மஹிந்த களமிறங்குவாரா இல்லையா என்ற விடயம் வெளிவரலாம் என சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தனிக்கட்சி அல்லது கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது மகிந்தவுக்கு சாத்தியமில்லை. எனவே சுதந்திரக்கட்சி சார்பில் போட்டியிடுவதே மஹிந்தவின் அரசியல் எதிர்காலத்துக்கு உகந்தது.

அதேநேரம் மஹிந்த தனித்து அல்லது கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டால் தமது கட்சியின் வாக்கு சிதறுபடும். எனவே மகிந்தவை தனித்துவிடக்கூடாது என ஜனாதிபதி மைத்திரியும் நினைக்கிறார்.

இத்தகைய பல காரணங்களின் அடிப்படையில் இச்சந்திப்பு இருவருக்கும் அவசியமான ஒன்று என சுதந்திரக்கட்சி மஹிந்த தரப்பு கூறிக்கொள்கிறது.