செய்திகள்

மஹிந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் படுதோல்வியடைவார் : எஸ்.பி.திஸாநாயக்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அவர் படுதோல்வியடைவார் என கிராமிய அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ஒரு போதும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்த விடமாட்டார் என்றே நாம் நம்புகின்றோம். அவ்வாறு அவர் தனியாக போட்டியிடுவராகவிருந்தால் படுதோல்வியடைவார். ஆனால் அவர் தொடர்ந்தும் எம்முடனேயே இருப்பார். என எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.