செய்திகள்

மஹிந்த மைத்திரி இணைப்புக்குழு மைத்திரியை சந்தித்தது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் ஒன்றிணைக்கும் குழுவினர் இன்று ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலாகத்தில் இன்று பிற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக  குழுவின் அங்கத்தவரான பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பேரோ தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் குழுவின் 6 பேரும் கலந்துக்கொண்டதாகவும் இதன்போது கட்சியை ஒன்றிணைப்பது தொடர்பாக யோசனைகளை முன்வைத்தாகவும் அதற்கு ஜனாதிபதி சிறந்த சமிக்கையினை வெளிப்படுத்தியதாகவும் இதன்படி எதிர்வரும் நாட்களில் மஹிந்தவையும் மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையும் சந்திக்கவுள்ளதாகவும் டிலான் தெரிவித்துள்ளார்.