செய்திகள்

மஹிந்த – மைத்திரி இணைப்பு குழு புதன்கிழமை மஹிந்தவை சந்திக்கும்

மஹிந்த – மைத்திரி இணைப்புக் குழுவினர் எதிர்வரும் புதன்கிழமை மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சந்திப்பை கொழும்பில் நடத்தவே எதிர்பார்த்துள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இவர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த அந்த குழுவினர் அடுத்ததாக மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்க தீர்மானித்து அதற்கான தினத்தை ஒதுக்கியுள்ளனர்.