செய்திகள்

மஹிந்த -மைத்திரி இணைப்புக்கு சந்திரிக்கா , ராஜித இடையூறு : டலஸ் குற்றச்சாட்டு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் தடையாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும குற்றம் சுமத்தியுள்ளார்.
மாத்தறை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மகிந்தராஜபக்ஷவுக்கும் இடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தி இருவரும் ஒன்றாக பயணிக்க செய்வதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றது. அதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த இருவரும் அதற்கு தடையாக இருந்து வருகின்றனர். என அவர் தெரிவித்துள்ளார்