செய்திகள்

மஹிந்த , மைத்திரி எப்படி வந்தாலும் மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும் : அனுரகுமார

எதிர்வரும் பொதுத் தேர்தலில் மைத்திரி மஹிந்த அணிகள் ஒன்றாக போட்டியிட்டாலும் சரி தனித்தனியாக போட்டியிட்டாலும் சரி அவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என ஜே.வி.பி தலைவர் அனுரகுமரா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கண்டி திகன பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனவரி 8ம் திகதி மஹிந்தவையும் அவரின் அமைச்சர்களையும் தோற்கடிக்கவே மக்கள் வாக்களித்தனர். ஆனால் அவர்கள் மீண்டும் வர முயற்சிக்கின்றார்கள். மைத்திரியும் அவர்களை இணைத்துக்கொள்ள முடியுமா என சிந்திக்கின்றார். உண்மையில் மக்கள் எதை எதிர்பார்த்து ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்தார்களோ அது நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் மைத்திரி மஹிந்த இணைந்து போட்டியிட்டாலும் சரி தனித்தனியாக போட்டியிட்டாலும் சரி மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும்.