செய்திகள்

மஹிந்த மைத்திரி சந்திப்பொன்று விரைவில் நடக்கவுள்ளது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும் இடையே மிக விரைவில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவையும் இணைக்கும் வகையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினரால் அமைக்கப்பட்டுள்ள இணைப்புக் குழுவினர்  இது தொடர்பாக மஹிந்த ராஜபக்‌ஷவுடன் கலந்துரையாடுவதற்காக தினமொன்றை ஒதுக்கிக்கொண்டுள்ளனர்.
இதற்கிணங்க எதிர்வரும் புதன்கிழமை அந்த குழுவினரை சந்திக்க மஹிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக அந்த குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை அந்த சந்திப்பை கொழும்பில் நடத்தவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிப் பாதைக்கு கெண்டு செல்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள வேண்டுமென கடந்த செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களின் கூட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்த யோசனைக்கமைய கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா , தேசிய அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த , டிலான் பெரேரா , குமார வெல்கம , டி.பி.ஏக்கநாயக்க மற்றும் ஜோன் செனவிரட்ன ஆகியேரை உள்ளடக்கிய குழுவொன்று அமைக்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.