செய்திகள்

மஹிந்த – மைத்திரி சந்திப்பு வெசாக் பண்டிகைக்கு பின்பு?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் வெசாக் பண்டிகையின் பின்னர் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது.

இந்த தகவலை மஹிந்த ராஜ பக்ஷவின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கான முயற்சிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிலையில் சந்திப்புக்கான திகதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் வழங்குவார் என்று வெல்கம நம்பிக்கை வெளியிட்டார்.

ஏற்கனவே இரண்டு பேருக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவிருந்த போதும் ஜனாதிபதியின் வேலைப்பளு கார ணமாக சந்திப்பு இடம்பெறவில்லை என்றும் வெல்கம குறிப்பிட்டார்.