செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரை இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் 24ம் திகதியும் கோதாபய ராஜபக்ஷவை எதிர்வரும் 22ம் திகதியும் ஆணைக்கழுவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த நவம்பர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட் பின்னர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு அமைச்சு பதவி கொடுத்தமை இலஞ்சமாக கருதப்படும் நிலையில் அது தொடர்பாக விசாரிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷவையும் காலியில் கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் ஆயுத களஞ்சியம் தொடர்பாக விசாரணை நடத்த கோதாபய ராஜபக்ஷவுக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.