மஹிந்த ராஜபக்ஷவை வேட்பாளராக நியமிக்குமாறு கோரி கையொழுத்து சேகரிப்பு
எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொது ஜன ஜக்கிய முன்னணி ஆகியவற்றின் பிரதம வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்குமாறு கோரி பத்து இலட்சம் கையொப்பம் இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டத்தின் ஹற்றன் நகர பஸ் தரிப்பிடத்தில் இன்று ஆரம்பமானது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் எலப்பிரிய நந்தராஜின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது சிலர் இதற்கு கையொப்பம் இட்டு தங்களின் ஆதரவுகளை வெளிப்படுத்தினர்.
இந்த கையெழுத்து இடும் நிகழ்வு நுவரெலியா மாவட்டம் முழுவதும் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.