செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் நியமனம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பிற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி பாதுகாப்பு செயலகத்தில் கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவரே இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

பிரமுகர்களுக்கு எவ்வித இராணுவ பாதுகாப்புகளும் தற்போது வழங்கப்படுவதில்லை எனவும் பாதுகாப்பு செயலாளர் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு அகற்ப்பட்ட போதிலும், அதற்கு பதிலாக பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருனாசேன ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டடமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எந்தவொரு பிரமுகர்களுக்கும் இராணுவ பாதுகாப்பு வழங்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார்.

n10