செய்திகள்

மஹிந்த விரைவில் மைத்திரியின் வீட்டுக்கு செல்வார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது வசிக்கும் வீடு வழங்கப்படுமென அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு இன்னும் உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படாதிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வசிக்கும் வீடு வழங்கப்படவுள்ளது. ஜனாதிபதிக்கென புதிய வீடொன்று அமைக்கப்படுகின்றது. ஜனாதிபதி அங்கு சென்றதும்  மஹிந்தவுக்கு அந்த வீடு வழங்கப்படும். தற்போது ஜனாதிபதி முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல வசித்த வீட்டிலேயே வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. என்றார்.