செய்திகள்

மாகாணங்கள் சிலவற்றில் கடும் உஷ்ணமான காலநிலை

உஷ்ணமான காலநிலை தொடர்பாக எச்சரிக்கை அறிவித்தலொன்று வளிமண்டலவியல் திணைக்களதத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
வடமேல் , வடமத்திய மாகாணங்களிலும் மற்றும் மன்னார் , வவுனியா , முல்லைத்தீவு , திருகோணமலை , மட்டக்களப்பு , கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களிலும் இவ்வாறாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துமளவுக்கு இருக்குமெனவும் இது தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் , வயோதிபர்கள் மற்றும் நோய் நிலையில் இருப்போர் தொடர்பாக இந்த காலத்தில் அவதானமாக இருக்குமாறும் மற்றும் தேவையான அளவுக்கு நீரை அருந்துமாறும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. -(3)