செய்திகள்

மாகாண சபைகள் குறித்து மீளாய்வு செய்ய வேண்டும்: ஜனாதிபதி மைத்திரி

மாகாணசபைகள் தொடர்பில் மீளாய்வு செய்ய வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் மாகாண முதலமைச்சர்கள், ஆளுநர்கள், செயலாளர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த 28 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த மாகாணசபை முறைமையின் செயற்திறன் குறித்து மீளாய்வு செய்ய வேண்டிய ஓர் தருணத்தில் இருக்கின்றோம்.

வினைத்திறன் மற்றும் திட்டங்களை அமுல்படுத்தப்படுத்தல் தொடர்பில் மாகாணசபைகள் கவனம் செலுத்த வேண்டும்.
அரசியல் கட்சி அல்லது கொள்கை எதுவாக இருந்தாலும் அரசியல்வாதியின் பிரதான நோக்கம் பொதுமக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு சேவையாற்றுவதாகும்.

மாகாணசபைகள் தங்களது அதிகாரங்கள் குறித்தே அதிக கவனம் செலுத்துகின்றன. எனினும் அதிகாரத்தைப் பயன்படுத்தி வெற்றிகரமாக காத்திரமான சேவையாற்றுவதே முக்கியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

32

31