செய்திகள்

மாகாண சபை செய்ய வேண்டிய பணிகளைச் செய்ய வடமாகாண சபை தவறிவிட்டது: விஜித ஹேரத்

மாகாண சபையினால் மேற்கொள்ள வேண்டிய பணிகளை செய்ய வட மாகாண சபை தவறியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

இது குறித்து வட பகுதி அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தமக்கு ஒரே ஒரு காரணியாக இருக்கும் இனவாதத்தை மீண்டும் மேலெழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் விடுதலை முன்னணி உயர் நீதிமன்றத்திற்கு சென்றமையாலேயே வடக்கையும் கிழக்கையும் பிரிக்க முடிந்தது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் இனவாதிகள் தனிநாடு, வடக்கு, கிழக்கு இணைப்பு போன்ற தந்திரங்களை பயன்படுத்தி மீண்டும் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றனர் எனவும் விஜித்த ஹேரத் இங்கு மேலும் கருத்து வௌியிட்டுள்ளார்.

R-06