செய்திகள்

மாசிலாமணி படத்தில் காமடியனாகிய அஜித்! ரசிகர்கள் அதிருப்தி

சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள மாசு என்கிற மாசிலாமணி படத்தில் அஜீத், விஜய் படங்களின் வசனங்களையும், கதாபாத்திரப் பெயர்களையும் பயன்படுத்தியது ஏன் என அஜீத், விஜய் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான மாசு என்கிற மாசிலாமணி படம் நேற்று வெளியானது. இந்தப் படத்தில் விஜய்யின் துள்ளாத மனமும் துள்ளும், கத்தி மற்றும் அஜீத்தின் ஆரம்ப, வீரம் படங்களின் பிஜிஎம், வசனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு காட்சியில் கப்பல் படை அதிகாரிகளாக வரும் சூர்யாவின் கதாபாத்திரம் ஜெகதீஷ் (துப்பாக்கி படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர்) மற்றும் பிரேம்ஜியின் பெயர் விநாயக் மகாதேவ் (மங்காத்தாவில் அஜீத்தின் பெயர்) எனவும் உள்ளது.

இதனால் சமூகவலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விஜய், அஜீத் படங்களின் வசனங்களைப் பயன்படுத்தியது ஏன் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள். மேலும் ஹீரோவுக்கு விஜய் கதாபாத்திரத்தின் பெயரை வைத்துவிட்டு, காமெடியனுக்கு அஜீத் கதாபாத்திரத்தின் பெயரை வைத்தது பலருக்கும் பிடிக்கவில்லை. இதனால் அஜீத் ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருகிறார்கள். இதை வைத்து அஜித், விஜய் ரசிகர்களும் ஒருவருக்கொருவர் சீண்டிக்கொள்கிறார்கள்.