செய்திகள்

மாடுகளைத் திருடி வெட்டிய அறுவர் 80 கிலோ இறைச்சியுடன் யாழில் கைது

யாழ்.இளவாலைப் பிரதேசத்தில் மேய்ச்சல் தரை வயலில் மேயும் மாடுகளைத் திருடி இறைச்சிக்கு வெட்டியதாகக் கூறப்படும் அறுவரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை(10.05.2015) இளவாலைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனியாரொருவரின் காணியில் மாடுகளின் எச்சங்களைச் சந்தேகநபர்கள் எறிந்து விட்டுச் சென்றதையடுத்து அந்தக் காணியின் உரிமையாளர் இளவாலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் எச்சங்கள் வீசியவர்களைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடாத்திய போது திருடிய மாடுகளை அவர்கள் இறைச்சிக்கு வெட்டியமை தெரியவந்தது.சந்தேக நபர்களிடமிருந்து 80 கிலோ கிராம் இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்.நகர் நிருபர்-