செய்திகள்

மாணவனை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர், 15 வயது பாடசாலை மாணவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் எதிர்வரும் 11ஆம் திகதி வரையிலும் விளக்கமறியல் வைக்குமாறு களுத்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த மாணவன், தனியார் வகுப்புக்கு சென்றபோதே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 45வயதுடைய சந்தேகநபரான ஆசிரியர், களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.