செய்திகள்

மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர் புகை , நீர் தாக்குதல்

கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்க தீர்வுகாணுமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு மற்றும் நீர் பிரயோகம் மேற்கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடித்துள்ளனர்.

ஜயவர்தனபுர பல்கலைக்கலகத்திற்கு முன்னாலிருந்து பேரணியாக சென்ற மாணவர்கள்; அலரி மாளிகை நோக்கி செல்ல முற்படுகையில் கொள்ளுப்பிட்டிய பகுதியில் வீதித்தடைகளை போட்டு தடுத்து நிறுத்திய பொலிஸார் புகைக் குண்டு மற்றும் நீர் பிரயோகம் மேற்கொண்டு அவர்களை விரட்டியடித்துள்ளர்.