செய்திகள்

மாணவர்களுக்காக 20ஆம் திகதி முதல் கல்வி தொலைக்காட்சி : தமிழ் , சிங்களத்தில் நிகழ்ச்சிகள்

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை சீர்குலைக்காமல் இருப்பது சகலரதும் பொறுப்பாகும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொவிட் நைன்ரீன் நோய் தொற் றை தடுப்பு தொடர்பாக மாத்தறையில் கடந்த 3ஆம்திகதி நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்களுடபான சந்திப்பின் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் , மாணவர்களின் நலனை கருத்திற் கொண்டு ஏப்ரல் 20 ஆம் திகதி தொடக்கம் தொலைக்காட்சி ஊடாக தமிழ் மற்றும் சிங்கள மொழியில் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்க இரண்டு பிரத்தியேக அலைவரிசைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன்படி 20ஆம் திகதி முதல் செனல் ஐ மற்றும் நேத்திரா தொலைகாட்சிகளில் கல்வி நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. -(3)