செய்திகள்

மாணவர்களுக்கு காலை உணவு வழங்க குழு நியமனம்

 பாடசாலை பிள்ளைகளில் பெரும்பான்மையான பிள்ளைகள் காலை உணவை உண்ணாமலேயே பாடசாலைக்கு வருகின்றனர் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் அமைச்சரவைக்கு தெரிவித்தார்.

இதனடிப்படையில் அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இக்குழு மாணவர்களுக்கு போசாக்கான உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.