செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து குடாநாட்டில் போதைப் பொருள் விற்பனை அதிகரிப்பு

யாழ் நகரில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை அதிகரித்துக் காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தடை செய்யப்பட்ட மாவா என்று அழைக்கப்படும் போதைப் பொருள் யாழ்.நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிகளவில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாதாரணமான கடைகளில் கூட மிகச் சாதாரணமாக இதனை விற்பனை செய்து வருவதாக நேரில் கண்டோர் விசனம் தெரிவித்துள்ளனர். இதைத் தடுப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இப்போதைப் பொருள் பாவனை அதிகரிப்பு காரணமாக பாடசாலை மாணவர்களும் இளம் சந்ததியினரும் பாதிப்புக்குள்ளாவதாக அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.