செய்திகள்

மாணவர்களை ஏற்றிசெல்லும் வாகனங்கள் திடீர் சோதனை

அட்டன் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிசெல்லும் வாகனங்கள் (பஸ்,வேன்) மற்றும் பயணிகளை ஏற்றி வெல்லும் வாகனங்கள் என அனைத்தையும் 03.06.2015 அன்று காலை அட்டன் பொலிஸார் மற்றும் நுவரெலியா மோட்டார் வாகன பரிசோதகர் எம்.எஸ்.ஜே.சீ பண்டார ஆகியோர் வாகனங்களை திடீர் சோதனைக்குட்படுத்தினார்கள்.

அட்டன் போக்குவரத்து பொலிஸாரின் உதவியுடன் இவ் வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டது.

இதன்போது 30 வாகனங்கள் சோதனைக்குட்படுத்தப்பபட்டது. இதில் 23 வாகனங்களுக்கு எதிராக அட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வாகனங்களில் காணப்படும் குறைபாடுகளை 14 நாட்களுக்குள் சரி செய்து பொலிஸ் நிலையத்தில் பரிசீலனை செய்யூமாறு அட்டன் பொலிஸார் மற்றும் நுவரெலியா மோட்டார் வாகன பரிசோதகர் எம்.எஸ்.ஜே.சீ பண்டார ஆகியோர் இவ்வாறு உத்திரவிட்டுள்ளனர்.

DSC09816