செய்திகள்

மாணவர்களை பெற்றோருடன் கையடக்கத்தொலைபேசி மூலமாக உரையாடச்செய்த பின்னர் அவர்களை சுட்டுக்கொன்றனர்.

பெற்றோருடன் கென்ய பல்கலைகழக மாணவர்களை உரையாடச்செய்த பின்னர் அவர்களை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அது மேலும் தெரிவித்துள்ளதாவது,
எலோசி கரிமி அச்சத்தினால் உறைந்துபோன நிலையில் ஓளிந்திருந்தார். அவரது சகாக்கள் அச்சத்துடன் தப்பியோடிகொண்டிருந்தனர்.அவர்களை சுற்றி துப்பாக்கி சத்தங்களை கேட்க முடிந்தது,எங்கு பார்த்தாலும் அலறல்,அதிகாலைக்கு சற்று முன்னர் என்பதால் முழுவதும் இருளாக காணப்பட்டது.  உயிர்தப்ப விரும்பினால் வெளியே வாருங்கள், இல்லாவிட்டால் உள்ளேயிருங்கள் என தீவிரவாதிகள் சத்தமிட்டனர்.  எனக்கு அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெரியும். அதனால்நான் மேற்கூரைக்குள்ளேயே அடுத்த 28 மணித்தியாலங்களுக்கு பதுங்கியிருந்தேன் என்கிறார், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்க்ப்பட்டிருக்கும் கரிமி.
04Kenya6-articleLarge

கென்ய பல்கலைக்கழகததில் 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் அல்சகாப் தீவிரவாதிகளால் படுகொலைசெய்யப்பட்டது குறித்த புதிய தகவல்கள் வெளிவரத்தொடங்கியுள்ளன.  1998 இல் கென்யா தலைநகரில் இடம்பெற்ற அமெரிக்க தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பின்னர் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமிது.  அல்சகாப் பயங்கரவாதிகள் விடுத்த வேண்டுகொளை ஏற்று மைதானத்திற்குள் தாமாக வந்து தரையில் படுத்ததன் மூலமாக மாணவர்கள் பொறியில் சிக்கினர் என தெரிவிக்கப்படுகின்றது.

அவர்களை நெற்றிப்பொட்டில் சுட்டுத்தள்ளியுள்ளனர் பயங்கரவாதிகள்.
தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் பயிற்சிபெற்ற சினைப்பர் போல தென்பட்டார். கென்ய படையினர் பலரை இலக்குவைத்து தாக்கியதன் மூலமாக மீட்பு பணியை தாமதப்படுத்தினார் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்னர்.  சில மாணவர்களை தங்கள் தொலைபேசியில் பெற்றோரை தொடர்புகொள்ள செய்ய அல்சகாப் பயங்கiவாதிகள் சோமாலியா மீது கென்யா இராணுவரீதியில் தலையிட்டதே இந்த தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.  தங்கள் நண்பர்களின் விசும்பல் சத்தத்தை தாங்கள் கேட்டதாகவும், பின்னர் ஒரு துப்பாக்கி சத்தத்தின் பின்னர் அவர்கள் அவர்களின் விசும்பலை கேட்க முடியவில்லை என மறைந்திருந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.