செய்திகள்

மாணவியின் கொலை சம்பவத்தை பயன்படுத்தி வடக்கில் பயங்கரவாதம் தலைத்தூக்க முயற்சியாம் : ஹெல உறுமய தெரிவிக்கின்றது

யாழ்பாணத்தில் பாடசாலை மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத குழுக்கள் தலைதூக்க முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அங்கு சட்டத்தை கையிலெடுத்து குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுக்க வேண்டுமென பொலிஸ் மற்றும் மற்றைய சம்பந்தப்பட்ட பாதுகாப்பு தரப்பினரிடம் கேட்டுக்கொள்வதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
ஹர்த்தால் உட்பட போராட்டங்கள் வேறு நோக்கங்களை அடிப்படையாக கொண்டது போன்றே தெரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.