செய்திகள்

மாணவியை கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்திய மூவர் கைது

புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி பிரதேசத்தில் 17 வயதுடைய மாணவியொருவரைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அச்சிறுமியின் காதலர் உட்பட மேலும் இரு இளைஞர்கள் புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் வைத்தே இந்த மாணவி இவ்வாறு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி பிதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியின் காதலனான 24 வயது இளைஞனுடன், புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களால் கூட்டு வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கல்லடி போதிராஜபுர பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மாணவி புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களான இளைஞர்களை புத்தளம் நீதிமன்றத்தில் நேற்று பொலிஸார் ஆஜர் செய்தபோது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.