செய்திகள்

மாணவி கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது பாடசாலை மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

புங்குடுதீவு வல்லனை பகுதியைச் சேர்ந்த ரவி, செந்தில் மற்றும் சின்னாம்பி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து ரவி என்ற சந்தேகநபர் முதலில் கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டார். அதன்பின் மற்றைய சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.