செய்திகள்

மாணவி படுகொலையைக் கண்டித்து தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் நாளை ஆர்ப்பாட்டம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும்,குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டணையை உடனடியாக வழங்குமாறு கோரியும் நாளை புதன்கிழமை(19.5.2015) யாழ்.தொழில்நுட்பக் கல்லூரி மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,பெண்கள்,மாணவர்கள்,பொது மக்கள்,பொது அமைப்புக்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டு தமது போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
யாழ்.நகர் நிருபர்-