செய்திகள்

மாணவி படுகொலை விவகாரத்தில்; 3 அமைப்புகளுக்கு தடை!!

புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி அமைப்பு மற்றும் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான யாழ். பெண்கள் சக்தி ஆகிய அமைப்புகளுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவியின் படுகொலைச் சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலேயே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கின்றது.