செய்திகள்

மாணவி ஹரிஸ்ணவி கொலை: சந்தேக நபருக்கு ஏப்ரல் 18 வரை விளக்கமறியல் நீடிப்பு

வவுனியாவில் வன்புனர்வின் பின் படுகொலை செய்யப்பட்ட 14 வயது மாணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

மாணவியின் கொலை தொடர்பில் கைதான அயல்வீட்டு குடும்பஸ்தர் நேற்று திங்கள் கிழமை வவுனியா மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்காக முற்படுத்தப்பட்டார். குறித்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி சந்தேக நபரின் விளக்கமறியலை ஏப்ரல் 18 வரை நீடித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஒரு மாதம் கடந்த நிலையிலும் மாணவியின் மரணம் தொடர்பான டிஎன்ஏ, இரசாயன பகுப்பாய்வு அறிக்கைனள் இன்னும் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

N5