செய்திகள்

மாதகலில் கஞ்சாவுடன் நால்வர் கைது!

மாதகல் கடற்கரையில் இருந்து 83 கிலோ கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி ஒன்றில் சென்ற நால்வரை இளவாலைப் பொலிஸார் கைதுசெய்தனர்.

நேற்று வியாழக்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாதகல் கடற்கரையில் இருந்து நால்வருடன் வந்த முச்சக்கர வண்டியை வழிமறித்த பொலிஸார் அதனைச் சோதனையிட்டபோது அதற்குள் பொதிசெய்யப்பட்ட நிலையில் இருந்த கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது.

நால்வரையும் கைதுசெய்த பொலிஸார், கஞ்சா ஏற்றிவந்த முச்சக்கர வண்டியையும் பொலிஸ் நிலையத்துக் கொண்டுசென்றனர். இந்தச் சம்பவத்துடன் மூவினத்தவர்களும் தொடர்பட்டிருக்கின்றமை விசாரணையின் மூலம் தெரியவந்தது.

கைதுசெய்யப்பட்ட நால்வரில் இரு தமிழர்கள், ஒரு முஸ்லிம், ஒரு சிங்களவர் அடங்குகின்றனர். மேலதிக விசாரணைகளை இளவாலைப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.