செய்திகள்

மாதம்பையில் வீடொன்றின் மீது துப்பாக்கிச் சூடு

மாதம்பை, ஊரலிய பிரதேசத்தில் வீடொன்று மீது நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக மாதம்பை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தால் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வீட்டிற்கு முன்பக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு 11.00 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சத்தம் கேட்ட போது, அது பட்டாசு சத்தமாக இருக்கலாம் என்று எண்ணி அது தொடர்பில் தாம் பொருட்படுத்தவில்லை என்று வீட்டின் உரிமையாளர் கூறியுள்ளார்.

சம்பவம் இடம்பெறும் போது மூன்று பிள்ளைகள், மனைவி மற்றும் தந்தையும் வீட்டில் இருந்ததாகவும், இன்று காலை வரை சம்பவம் தொடர்பாக அறிந்திருக்கவில்லை என்றும் அவர் பொலிஸ் நிலையத்தில் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்தப் பிரதேசத்தில் நேற்றிரவு சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் சுற்றித்திரிந்தமை தொடர்பாக அறியக்கிடைத்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

n10