மாத்தறையில் ஜனாதிபதி தலைமையில் நடந்த படைவீரர் ஞாபகார்த்த விழா (படங்கள்)
இந்த நாட்டில் தேசிய மரபை பாதுகாத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தின விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை மாத்தறை, கடற்கரை வீதியில் நடைபெற்றது.
அணிவகுப்பு விழாவில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் கலந்துகொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதி செயலாளர் பீ.பி. அபயக்கோன், இராஜாங்க பாதுகாப்பு அமைச்சர் ருவன் விஜேவர்தன, பாதுகாப்புச் செயலாளர் பி. டி. யு. டி. பஸ்நாயக மற்றும் முப்படை தளபதிகள் , அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.