செய்திகள்

மாத்தறை கூட்டத்தில் மஹிந்த! மக்களைப் பார்த்து கையசைத்துச் சென்றார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்குவோம் என்ற தொனிபொருளில் மாத்தறை கொட்டுவேகொட சனத் ஜயசூரிய விளையாட்டு மைதானத்தில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கின்ற கூட்டத்துக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டத்துக்கு வருகைதந்த மஹிந்த ராஜபக்ஷ, பிரதான மேடைக்கு வருகைதரவில்லை என்றும் அங்கு கூடியிருந்த மக்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றுவிட்டார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.