செய்திகள்

மாத்தறை கூட்டத்துக்கும் எமக்கும் தொடர்பில்லை : வெளியாகும் விளம்பரங்கள் தொடர்பாக ஐ.ம.சு.கூ செயலாளர் மறுப்பு

மாத்தறையில் இன்று மஹிந்தவுக்கு ஆதரவாக நடத்தப்படும் கூட்டத்துக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் கிடையாதென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மாத்தறையில் குறித்த கூட்டம் நடத்தப்படுவதாக நேற்றைய தினம் பத்திரிகைளில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்து சுசில் பிரேமஜயந்தவினால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டிருந்தது. அந்த அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
மாத்தறையில் நடைபெறவுள்ள கூட்டத்துக்கும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எந்த தொடர்பும் கிடையாது என்பதுடன் குறித்த விளம்பரமும் எமது அனுமதியுடன் வெளியிடப்பட்டது அல்ல. இந்த கூட்டம் எமது ஏற்பாட்டில் நடக்கவில்லை என அவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.