செய்திகள்

மாரி: தனுஷும் அனிருத்தும் இணைந்து ஆட்டம்

தனுஷ் தற்போது பாலாஜி மோகன் இயக்கும் மாரி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக முதன்முதலாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். மாரி படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மேலும் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வருகிறது.

இந்த படத்துக்கு தான் பாடியுள்ள மார்க்கெட் குத்து பாடலுக்கு தனுஷ் உடன் சிறந்த ஒரு குத்தாட்டம் போட்டிருக்கிறார். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் படம் வெளிவருகிறது.