செய்திகள்

மாரி பட முன்னோட்டத்திற்கு பெரும் வரவேற்பு

நடிகர் தனுஷ் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் மாரி படத்தின் முன்னோட்டம் நேற்று மாலை வெளியானது. வெளியான 16 மணி நேரங்களுக்குள்ளேயே இதுவரை 5 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்த்து ரசிக்கப்பட்டு இருக்கிறது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படம் வரும் ரம்ஜான் தினத்தன்று வெளியாகும் என்று இயக்குநர் பாலாஜி மோகன் தெரிவித்து உள்ளார்.

நேற்று வெளியான மாரி படத்தின் மூன்னோட்டம் நன்றாக இருப்பதாக தனுஷின் ரசிகர்கள் தெரிவித்து உள்ளனர்.