செய்திகள்

மார்ச்சில் சீனா செல்கிறார் மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் மார்ச் மாதத்தில் சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வார் என அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ண தெரிவித்திருக்கின்றார்.

இந்த விஜயத்தின்போது இலங்கையில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து சீனத் தலைவர்களுடன் மைத்திரிபால சிறிசேன இந்த விஜயத்தின் போது பேச்சுக்களை முன்னெடுப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

பெப்ரவரி 15 இந்தியாவுக்கான நான்கு நாள் விஜயம் ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா மேற்கொள்ளவிருக்கின்றார். இந்த விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியுடன் அவர் பேச்சுக்களை முன்னெடுப்பார்.

மைத்திரியின் முதலாவது விஜயமாக இந்திய வியம் அமையும் அதேவேளையில் அவரது இரண்டாவது விஜயமாக சீனாவுக்கான விஜயம் அமையும் என எதிர்பார்க்கலாம்.