செய்திகள்

மார்ச் 7 ஆம் திகதியை கருப்பு ஞாயிறாக பேராயர் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வலியுறுத்தி எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை கருப்பு ஞாயிறாக கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் அறிவித்துள்ளார்.

அன்றைய தினத்தில் பூசைகளில் கருப்பு நிற ஆடைகளில் கலந்துகொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை கடுமையான விமர்சித்துள்ள அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதில் நீதி கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கருப்பு ஞாயிறாக 7 ஆம் திகதியை அறிவிக்க நடவடிக்கையெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். -(3)