செய்திகள்

மாற்றியமைக்கப்பட்ட சிங்கக் கொடி விவகாரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்

மாற்றியமைக்கப்பட்ட சிங்கக் கொடிகள் ஆர்ப்பாட்டத்தின் போது பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக பொலிஸாரினால் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 23ம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு முன்னாள் பாதுகாப்ப செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக அமைப்புகளை சேர்ந்த பலர் தேசியக் கொடியை போன்று சிங்கக் கொடிகளை அங்கு கைகளில் வைத்திருந்த நிலையில் அந்த கொடிகள் தேசிய கொடியில் காணப்படும் சிறுபான்மை மக்களை காட்டும் நிறங்கள் இன்றி சிறுபான்மையினத்தவர்களுக்கு எதிரான வகையில் காணப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தள்ள நிலையிலேயே பொலிஸார் அது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும் அந்த கொடிகள் எவ்வாறு அந்த இடத்துக்கு வந்ததென தெரியாதெனவும் தாங்களும் அதனை கொடியை கையில் பிடித்திருந்தமைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டிருந்த அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.