செய்திகள்

மாலபே மருத்துவக் கல்லூரிக்கு எதிராக வைத்தியர்கள் சங்கம் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் முறைப்பாடு

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
குறித்த மருத்துவ கல்லூரியின் மாணவர்களுக்கு அரச வைத்தியசாலைகள் சிலவற்றில் பயிற்சிகளை வழங்குவதற்கு சுகாதார செயலாளர் நடவடிக்கையெடுத்திருப்பது அரச சொத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தும் செயற்பாடு என தெரிவித்தே அந்த சங்கத்தினர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.