மிச்செல் பச்செலெட்டின் அறிக்கை தொடர்பான விவாதம் இன்று ஆரம்பம்!
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போது, மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலெட், சமர்பித்த பல்வேறு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த வாய்மொழி மூல அறிக்கை தொடர்பான உறுப்பு நாடுகளின் விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது.
கூட்டத் தொடரை ஆரம்பித்து உரையாற்றிய மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை, ஆப்கானிஸ்தான், மியன்மார் உள்ளிட்ட நாடுகளின் மனித உரிமைகள் தொடர்பில் வாய்மூல அறிக்கையை சமர்பித்திருந்தார்.
இதன்படி இது தொடர்பான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது. இதில் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள் தமது நிலைப்பாடுகளை முன்வைக்கவுள்ளன.
எதிர்வரும் எட்டாம் திகதி வரை இந்த கூட்டத் தொடர் இடம்பெறும். 40க்கும் மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான நிபுணர்களும் நிறுவனங்களும் முன்வைத்துள்ள சுமார் 90 அறிக்கைகள் குறித்து இந்த பேரவைகள் கலந்துரையாடப்படும்.
-(3)




