செய்திகள்

மிட்சல் ஸ்டார்க் புதிய நம்பிக்கையை அளித்துள்ளார்

பெங்களுர் ரோயல்சலஞ்சர்ஸ் அணிக்கு ஆஸி வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் புதிய நம்பிக்கையை அளித்துள்ளார் எனினும் அணியின் ஏனைய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக விளையாடாவிட்டால் அணி தொடர்ந்தும் நெருக்கடியை சந்திக்கலாம். தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள அணி தற்போது புதிய நம்பிக்கையுடன் விளையாட தொடங்குவதற்கான காரணமாகவும் அவர் காணப்படுகின்றார், அணியை கைவிடுவது குறித்து முகாமையாளர்கள் சிந்தித்து வருவதாக பேச்சுக்கள் அடிபடும் சூழலில் ஸ்டார்க் மீண்டும் நம்பிக்கையை ஊட்டியுள்ளார்.

டெல்லி அணியை ஞாயிற்றுக்கிழமை இவர்கள் 95 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச்செய்தமை முக்கியமானது.  ஸ்டார்க் ஆரோன் ஜோடியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் டெல்லி அணியினர் தடுமாறினர். போட்டி முடிவடைந்த பின்னர் விராட்கோலி ஸ்டார்க்கின் பந்துவீச்சை பாராட்டினார்,ஸ்டார்க் ஆரோன் இருவரும், சிறந்த ஜோடி ஆனால் பந்துவீச்சிலோ அல்லது துடுப்பாட்டத்திலோ அனுபவசாலியொருவர் அவசியம், ஸ்டார்க் தனது இன்ஸ்விங் யோர்க்கர்கள் மூலம் விக்கெட்களை வீழத்தும் விதம் தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றது என்றார் அவர்.

ஸ்டார்க்கின் யோர்க்கர்கள் டெல்லி அணியின் மூன்று விக்கெட்களை வீழ்த்தின,ஓரு இன்ஸ்விங்கர் இரு அவுட்ஸ்விங்கர்கள்.அவர் விக்கெட் வீழ்த்திய பின்னர் தன்னை வெளிப்படுத்தும் விதத்தை பார்க்கும்போது அவர் சிரமமின்றி பந்தவீசுகின்றார் என்பது புலனாகின்றது. எனினும் அனைத்து போட்டிகளும் இவ்வாறு இலகுவாக அமையாது,அணியின் ஏனைய பந்துவீச்சாளர்கள் மோசமாக விளையாடும் நாள் வரலாம். அன்றைய தினமே ஸ்டர்க்கின் உண்மையான திறன் வெளிப்படும்.