மிதிபலகையிலிருந்து தவறி விழுந்து தாயும் மகனும் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதி (படங்கள்)
பொகவந்தலாவையிலிருந்து அட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் மிதிபலகையிலிருந்து தாய் ஒருவரும் அவருடைய பிள்ளையும் பொகவந்தலாவ அட்டன் பிரதான வீதியில் நோர்வூட் வெஞ்சர் பகுதியில் வைத்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து 14.05.2015 அன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாய் தனது பிள்ளையுடன் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.