செய்திகள்

மிதிபலகையில் சென்ற வயோதிபர் உயிரிழப்பு

பஸ் வண்டியின் மிதிபலகையில் நின்றுகொண்டு பயணம் செய்த 82 வயதுடைய நபர் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

லத்துவ – வெலிமட வீதியில் அம்பகஸ்தோவ சந்தி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பஸ் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஊவபரணகம பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தங்காளை – மாத்தறை பிரதான வீதியில் பெலியத்த பிரதேசத்தில் பஸ் ஒன்று மோதியதில் 72 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்துக்கு காரணமான பஸ் வண்டி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

n10